Sat03172018

Last updateSat, 17 Mar 2018 4am

Back You are here: Home ஜோதிடம் ஜோதிடம் செய்திகள் வாரபலன் வாரபலன் (7.1.18 முதல் 13.1.18 வரை)

வாரபலன்

வாரபலன் (7.1.18 முதல் 13.1.18 வரை)

மேஷம்: எதிலும் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உங்கள் பணிகள் மேலும் மெருகேறும். எடுத்த காரியங்களில் நினைத்தபடியே வெற்றி கிட்டும். தனாதிபதியின் சாதகமான நிலையால் வரவு கூடும். சேமிப்பு உயர்வடையும்.  நண்பர்கள்

வழியில் நினைவில் நிற்கத் தகுந்த பரிசுப் பொருள் ஒன்று வந்து சேரும். பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முன்பின் அறிந்திராத புதிய செயல் ஒன்றினை கற்றுக்கொள்ள முயற்சிப்பீர்கள். உறவினர்களோடு மனஸ்தாபம் தோன்றலாம். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை காக்கும்.வாழ்க்கைத்துணை உங்கள் வேகத்தோடு ஈடுகொடுப்பார். குடும்பப் பெரியோரின் ஆலோசனைகள் பயன் தரும். வேலைக்குச் செல்வோர் தங்கள் அறிவாற்றலின் மூலம் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். மாணவர்கள் பொழுதுபோக்கும் மனநிலையைத் தவிர்த்து கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கலைத்துறையினர் அனுபவஸ்தர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. நற்பலன்களை அனுபவிக்கும் வாரம் இது.

ரிஷபம்: சிரமங்களை சந்திக்க நேரும். நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக அமையும். அநாவசிய செலவுகள் கூடும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் வீண் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே இருந்து வரும் கருத்து வேறுபாட்டினைப் போக்க முயற்சிப்பீர்கள். புதிய முயற்சிகள் வீண் செலவினைத் தரும். உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிட்டாமல் போகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை காண்பீர்கள். மனதில் உள்ள சந்தேகங்களை அவ்வப்போது தெளிவுபடுத்திக் கொள்வது உங்கள் உடல்நலத்திற்கு நல்லது. தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கவுரவ செலவுகள் கூடும். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் அவதியுற நேரிடும். திடீர் விருந்தினர் வருகை உண்டு. மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். கலைத்துறையினர் தடைகளை சந்திப்பர். எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டிய வாரம் இது.

மிதுனம்: எடுத்த காரியங்கள் நன்மையாக முடிந்தாலும் ஒவ்வொரு செயலுக்கும் அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் இணைந்திருக்கும். வரவை விட செலவுகள் கூடும். உங்கள் பேச்சு மற்றவர்களால் தவறாகப் பொருள் காணப்பட்டு உடனிருப்போருடன் மனஸ்தாபம் தோன்றலாம். செல்போன் போன்ற தொலைதொடர்பு சாதனங்களை எங்காவது மறந்து வைத்துவிட்டு சிரமத்திற்கு ஆளாவீர்கள். கலைத்துறையினர் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வார்கள். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் அதிக செலவு தரும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கைகொடுக்கும். ஆன்மிகம் குறித்த விடை தெரியாத கேள்விகள் மனதில் அவ்வப்போது இடம்பிடிக்கும். வேலைக்குச் செல்வோருக்கு அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மாணவர்கள் கூட்டுப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. சராசரியான பலன்களைத் தரும் வாரம் இது.

கடகம்: உங்கள் முக்கியமான காரியங்களுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து வேலை வாங்குவீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். வீண்வம்பு விவகாரங்களை சந்திக்க நேரிடும். நீங்கள் செய்யும் பண உதவி திரும்பக் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உங்களுடைய பணம் உங்களுக்கு உதவாது வேறொரு இடத்தில் சென்று முடங்கும். குடும்பத்தில் சலசலப்பு தோன்றும்.கலைத்துறையினர் கடும் போட்டியால் சங்கடத்தை சந்திக்க நேரிடும். வீட்டினை சுத்தப்படுத்தும் போது தற்காப்புடன் செய்ய வேண்டியது அவசியம். தூசி, ஒட்டடை, அழுக்கு ஆகியவற்றால் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும். பிள்ளைகளின் துணை உங்கள் பணிகளுக்கு வலு சேர்க்கும். வாழ்க்கைத்துணையின் உத்யோகத்திற்கு உதவி செய்வீர்கள். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பினைப் பெறுவர். மாணவர்கள் ஆராயும் திறனை அதிகமாகப் பெற்றிருப்பர். கவனத்துடன் செயல்பட வேண்டிய வாரம் இது.

சிம்மம்: நற்சிந்தனைகள் அதிகரிக்கும். மனநிறைவோடு இருப்பீர்கள். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை வகுப்பீர்கள். உங்களை அறிந்தவர்கள் தங்கள் குடும்பப் பிரச்னைக்கு ஆலோசனை கேட்டு நாடி வருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் வார்த்தைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள். பணவரவு திருப்தி தரும். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். வாகனங்களில் பயணிக்கும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களோடு மனஸ்தாபம் தோன்றலாம். பிள்ளைகளின் செயல்கள் கவுரவத்தோடு மன மகிழ்ச்சியையும் தரும். நரம்பியல் சார்ந்த தொந்தரவுகளால் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகக் கூடும். தம்பதியருக்குள் கலந்தாலோசிக்கும் நேரம் குறைந்து, குடும்ப விவகாரங்களில் தனித்து முடிவெடுக்க வேண்டியிருக்கும். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள். மாணவர்களின் எழுத்துத்திறன் உயரும். கலைத்துறையினரின் சிந்தனைகள் பாராட்டினை பெறும். மதிப்பு உயரும் வாரம் இது.

கன்னி: மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். மனக்குழப்பம் தோன்றும். எனினும் சரியான நேரத்தில் சரியான துணை கிடைக்கும். மனக்குழப்பத்தினை மறைக்கும் முயற்சியில் பேசும் வார்த்தைகள் அடுத்தவர் மனதைப் புண்படுத்தக்கூடும்.பணவரவு சிறப்பாக இருக்கும். சேமிப்பில் ஈடுபடுவதற்கு சரியான சந்தர்ப்பம் இது. நீண்ட காலத்திற்குப் பிறகு பால்ய சிநேகிதர் ஒருவருடனான சந்திப்பு மனமகிழ்ச்சி தரும். வீட்டில் புதிய ஃபர்னிச்சர்கள் சேரும். ஏ.சி., ஃபிரிட்ஜ், ஏர்கூலர் முதலான குளிர்சாதனப் பொருட்களை புதிதாக வாங்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்களில் வேகத்தோடு விவேகமும் இணையும். வாழ்க்கைத்துணையின் ஆடை விவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வயதில் மூத்தவர்களுக்கு சேவை செய்வதில் நிம்மதி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு பரிசும் பாராட்டும் சேரும். வேலைக்குச் செல்வோருக்கு பொறுப்புயரும். மாணவர்கள் வகுப்பில் முன்னிலை பெறுவர். நன்மை தரும் வாரம் இது.

துலாம்: உங்கள் முயற்சிகள் வெற்றி தரும். துணிவுடன் பல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். செய்ய இயலுமா என்ற கேள்விக்கே இடமளிக்காது நேரடியாக செயலில் இறங்கி வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வரவு கூடும். சேமிப்பு உயர்வு காணும். தங்க, வெள்ளி ஆபரணங்களை வாங்க சந்தர்ப்பம் கூடி வரும். மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் முகத்திற்கு நேராக தைரியமாகப் பேசிவிடுவீர்கள். செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சமாகப் பயன்படும்.உறவினர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் செயல்களில் புதிய வேகம் இருக்கும். கொலஸ்ட்ரால் தொந்தரவால் உடல்நிலையில் சிரமம் உண்டாகலாம் என்பதால் எண்ணெய் பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது. தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். வேலைக்குச் செல்வோர் சம்பள உயர்வு காண்பர். மாணவர்களின் எழுத்து வேகம் உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். திறமை வெளிப்படும் வாரம் இது.

விருச்சிகம்: முயற்சிகள் வெற்றி பெறும். திட்டமிட்டுச் செயல்படும் திறன் கூடும். போட்டியான விவகாரங்களை சத்தமில்லாமல் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைப்பதில் உங்கள் பங்களிப்பு பிரதானமாக இருக்கும். தனஸ்தானத்தில் தன காரகன் சுக்ரனின் சஞ்சாரம் சிறப்பான பண வரவினைத் தரும். சேமிப்பு உயர்வடையும். தங்க, வெள்ளியினாலான ஆபரணங்கள் வாங்க இயலும். உடன்பிறப்புகளுக்கு இடையே மனஸ்தாபம் தோன்றலாம். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். உடல்நிலையில் கவனம் தேவை. பணிக்குச் செல்வோர் தங்களின் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பர். மாணவர்கள் கவனச்சிதறலைப் போக்க மனதினை ஒருமுகப்படுத்தும் பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். கலைத்துறையினர் எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். லாபகரமான வாரம் இது.

தனுசு: புத்தி சாதுர்யத்தோடு காரியமாற்றி கவுரவத்தை உயர்த்தி கொள்வீர்கள். நினைத்தது நடக்கும். சந்திக்க விரும்பிய நபர்கள் உங்களைத் தேடி வருவர். நிலுவையில் இருந்த பணிகள் விரைவாக நடந்தேறும். வரவு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்களோடு திடீர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. வாகனங்களில் பயணிக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. பிள்ளைகளின் பேச்சுத் திறமையைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவதாக எண்ணுவீர்கள். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்களுக்கு உற்சாகமூட்டும். அநாவசிய செலவுகள் உண்டாகலாம். உத்யோகம் பார்ப்போர் சாதுர்யமான அணுகுமுறை மூலம் பதவி உயர்விற்கான வாய்ப்பு பெறுவார்கள். கலைத்துறையினரின் செயல்திட்டங்கள் வெற்றி பெறும். மாணவர்கள் பாடங்களைப் புரிந்து படிப்பதில் ஆர்வம் கொள்வர். சிறப்பான முன்னேற்றம் தரும் வாரம் இது.

மகரம்: எடுத்த செயல்களில் அலைச்சல் கூடும். உழைப்பு வீணாவதை தடுக்க சாதுர்யமாக செயல்படுங்கள். மற்றவர்கள் உங்களைப் பயன்படுத்தி தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். பண வரவு நன்றாக இருக்கும். எனினும் செலவுகள் கூடும். எண்ணெய் பண்டங்களை தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது. வீட்டை சுத்தம் செய்யும்போது தகுந்த பாதுகாப்புடன் செய்யவும். விஷப்பூச்சிகளால் தொந்தரவு உண்டாகலாம். பிள்ளைகளின் வழியில் சுபசெலவுகளை சந்திக்க நேரிடும். வீண் வம்பு விவகாரங்கள் வரக்கூடும். வாழ்க்கைத்துணையின் அன்பான அணுகுமுறை உங்கள் பணிகளை எளிதாக்கும். கவுரவத்திற்காக செய்யும் செலவுகளை தவிர்க்க முயற்சிப்பீர்கள். வேலை பார்ப்போர் குறைந்த லாபத்திற்காக அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மனப்பாடம் செய்வதில் மாணவர்கள் சிரமம் காண்பர். கலைத்துறையினருக்கு கள்வர்களால் தொல்லை உண்டாகக்கூடும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய வாரம் இது.

கும்பம்: பரபரப்பாக செயல்படுவீர்கள். நேரம் சாதகமாக உள்ளதால் நினைத்ததை செயல்படுத்துவதில் தடையேதும் இருக்காது. புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வீண் வாக்குறுதிகளைத் தவிர்க்கவும். சீரான பண வரவு தொடரும். வீட்டு வேலைகளில் ஒருவிதமான அலுப்பு உண்டாகும். வித்தியாசமாகச் செயல்பட எண்ணும் நீங்கள் உரிய ஆதரவு கிடைக்காது சலிப்பிற்கு ஆளாவீர்கள். வீட்டினை அழகுபடுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தினை நிறைவேற்றும் முயற்சியில் அலைச்சல் காண்பீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்குத் துணையிருப்பார். குடும்பப் பெரியவர்களோடு அனுசரணையான அணுகுமுறை அவசியம். வேலைக்குச் செல்வோர் அலுவல் பணியில் எதிர்பார்த்த முன்னேற்றமின்றி அலுப்பாக உணர்வார்கள். மாணவர்களின் எழுத்து வேகம் உயரும். கலைத்துறையினரின் எண்ணங்கள் ஈடேறும். வெற்றி காணும் வாரம் இது.

மீனம்: செலவினங்களைச் சமாளிக்கும் வகையில் வரவு உயரும். மனப்பக்குவம் இருக்கும். பண விவகாரங்களைக் கையாளும்போது அதிக கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களின் சந்திப்பால் முன்னோர்களின் பெருமையை அறிந்துகொள்வீர்கள். பிள்ளைகளின் வழியில் செலவுகளை சந்திப்பீர்கள். வீட்டினை சுத்தம் செய்யும்போது ஒவ்வாமை உண்டாகலாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் உங்கள் செயல்வெற்றிக்குத் துணைநிற்கும். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் தங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பினைப் பெறுவர். மாணவர்கள் அவ்வப்போது சுயபரிசோதனை செய்யும் வகையில் மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. கலைத்துறையினர் தங்களுக்குத் தெரியாத பணிகளில் நிச்சயம் ஈடுபடக்கூடாது என்று எண்ணுவீர்கள். எனினும் போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதன் அவசியத்தை உணர்வது நல்லது.முன்னேற்றம் தரும் வாரம் இது.