Fri12152017

Last updateFri, 15 Dec 2017 9pm

Back You are here: Home சினிமா சினிமா சினிமா செய்திகள் வணங்காமுடி - அரவிந்த்சாமியும், 4 ஹீரோயின்களும்

சினிமா செய்திகள்

வணங்காமுடி - அரவிந்த்சாமியும், 4 ஹீரோயின்களும்

அஜித்தை 'அமராவதி' படம் மூலம் அறிமுகம் செய்த இயக்குனர் செல்வா அதன் பின் பல வெற்றிப் படங்களை இயக்கினார். தற்போது அவர்8.jpg - 8.39 kB

இயக்கி வரும் படம் 'வணங்காமுடி'. இப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அரவிந்த்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிப்பதெல்லாம் எப்போதே ஒரு முறை நிகழக் கூடிய விஷயம். இயக்குனர் செல்வா இதற்கு முன் இயக்கிய 'நான் அவனில்லை' படத்தின் இரண்டு பாகங்களிலும் 5 ஹீரோயின்கள் நடித்திருந்தார்கள். இப்போது இயக்கி வரும் 'வணங்காமுடி' படத்தில் 4 ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள்.

பொதுவாக ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இடம் பெற்றாலே பல சச்சரவுகள் வரும் என்று சொல்வார்கள். அப்படியிருக்க இயக்குனர் செல்வா 4 ஹீரோயின்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து எப்படி திட்டமிட்டபடி படத்தை முடிக்கிறார் என்பதை வருங்கால இயக்குனர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.