Mon02192018

Last updateTue, 20 Feb 2018 4am

Back You are here: Home சினிமா சினிமா கிசுகிசு/போட்டி விஜய் படத்தை நிராகரித்த ஓவியா...!

கிசுகிசு/போட்டி

விஜய் படத்தை நிராகரித்த ஓவியா...!

பிக்பாஸ் நிகழச்சியில் பெற்ற நல்லபெயரை சினிமாத்துறையில் தொலைத்து வருகிறார் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சக போட்டியாளர்கள் அவரை டார்ச்சர் பண்ணியதால் மக்களின் அனுதாபத்தைப்பெற்றார் ஓவியா. அதுவே அவருக்கு

ஆதரவு அலையை ஏற்படுத்தியது. 

இந்த வரவேற்பை வைத்து ஓவியாவைத் தேடி பட வாய்ப்புகள் தேடி வந்தன. அவற்றை எல்லாம் நிராகரித்த ஓவியா கடைசியில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக காஞ்சனா - 3 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க ஓவியாவை அணுகினார்கள். துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து விஜய் - முருகதாஸ் இணையும் மூன்றாவது படம் இது. விஜய்யின் 62ஆவது படமாக உருவாக உள்ள இந்தப்படத்தில் 'தீரன்' படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். 

இப்படத்தில் உள்ள முக்கிய வேடெமான்றில் நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கதாநாயகி இல்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டார் ஓவியா. இப்போது அந்த கேரக்டரில் 'பிக்பாஸ்' ஜூலி நடிப்பதாக தகவல்.