Wed01172018

Last updateWed, 17 Jan 2018 4am

Back You are here: Home சினிமா சினிமா கிசுகிசு/போட்டி த்ரிஷாவின் மோகினி பாடல்கள் இன்று வெளியாகிறது

கிசுகிசு/போட்டி

த்ரிஷாவின் மோகினி பாடல்கள் இன்று வெளியாகிறது

இந்த பொங்கலுக்கு தமிழில் நயன்தாரா நடித்த படங்கள் வெளியாகவில்லை என்றபோதும் தெலுங்கில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவுடன் அவர் நடித்துள்ள ஜெய்சிம்ஹா படம் ஜனவரி 12-ந்தேதியான இன்று வெளியாகிறது.

அதேபோல், தமன்னாவுககு ஸ்கெட்ச் படமும், ஹன்சிகாவுக்கு குலேபகாவலி படமும், கீர்த்தி சுரேஷ்க்கு தானா சேர்ந்த கூட்டம் படமும் வெளியாகின்றன. ஆனால் திரிஷாவுக்கு எந்த மொழியிலும் படங்கள் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், மாதேஷ் இயக்கத்தில் திரிஷா இரண்டு வேடங்களில் நடித்துள்ள மோகினி படத்தின் பாடல்கள் ஜனவரி 12-ந்தேதியான இன்று வெளியாகிறது. இந்த படத்திற்கு மெர்லின்-சாலமன் என்ற இரட்டையர் இசையமைத்துள்ளனர். ஆக, மோகினி பாட பாடல்கள் மூலம் தனது ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து கொடுக்கிறார் திரிஷா.