Tue06272017

Last updateTue, 27 Jun 2017 3pm

Back You are here: Home செய்திகள் செய்திகள் கனேடிய/ஐரோப்பிய செய்திகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்க்கு கனடியத் தமிழர்கள் உதவி

கனேடிய/ஐரோப்பிய செய்திகள்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்க்கு கனடியத் தமிழர்கள் உதவி

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளுக்கு உதவ வாருங்கள் - NCCT  தமிழகத்தில் இயற்கை அனர்த்தத்தில்

சிக்குண்டு தவிக்கும் தமிழக உறவுகளுக்கும் இந்த வெள்ளத்தில் உயிர் இழந்த தமிழக உறவுகளுக்கும் கனடியத் தமிழ் மக்களின் குரலாக செயல்ப்பட்டு வரும் "கனடியத் தமிழர் தேசிய அவை" (NCCT) கனடா வாழ் தமிழ் மக்களோடு இணைந்து ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது.

இயற்கையின் இந்தப் பேரிடரில் இருந்து மீண்டும் இயல்பு வாழ்வு வாழ தமிழக உறவுகளுக்கு உலக தமிழ் உறவுகளும் கை கொடுக்க வேண்டும் என்ற நோக்கோடு கனடா வாழ் தமிழ் மக்களின் ஆதரவோடு நிதி சேகரிப்பு நிகழ்த்தி தமிழக உறவுகளுக்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளது "கனடியத் தமிழர் தேசிய அவை" (NCCT).

ஈழத்தில் மக்கள் துயருற்ற போதெல்லாம் அம்மக்களுக்காக முழுமையாக அனைத்து வகையிலும் குரல் கொடுத்தவர்கள் எம் தமிழக உறவுகள். அவ்வுறவுகள் இன்று துயர் உற்று இருக்கையில் அவர்கள் அவலம் போக்கும் பணியில் உலகத் தமிழர்கள் நாமும் பங்கேற்பது எம் காலக் கடனாகும். இதே இயற்கை அனர்த்தத்தினால் ஈழத் தமிழ் உறவுகளும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றார்கள்.

எம் உறவுகளின் கண்ணீர் துடைக்கும் காலப்பணியில் கனடியத் தமிழர் தேசிய அவையினருடன் இணைந்து கொள்ளுங்கள். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் வெள்ள அவலங்களின் துயர் தீர்க்க சிறு துளி பெரு வெள்ளம் என உதவ வாருங்கள் என வேண்டி நிற்கின்றது "கனடிய தமிழர் தேசிய அவை" (NCCT).

இவ்வுதவித்திட்டத்திற்க உதவ விரும்பும் அனைத்து அமைப்புக்களும் சங்கங்களும் எம்முடன்தொடர்புகொள்ளுமாறு வேண்டி கொள்கின்றோம்.                                                   

                                                  கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

                                தொலைபேசி: 416-830-7703 - மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

                                                    முகநூல்: facebook.com/ncctonline