Fri12152017

Last updateFri, 15 Dec 2017 9pm

Back You are here: Home செய்திகள் செய்திகள் பொது/சிறப்பு செய்திகள் தமிழகத்தில் 5 மருத்துவக் கல்லூரிகளுக்குத் தடை!

பொது/சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் 5 மருத்துவக் கல்லூரிகளுக்குத் தடை!

தமிழகத்தில் சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஐந்து மருத்துவக் கல்லூரிகள் செயல்படுவதற்கு, மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.doc.jpg - 14.43 kB

தமிழ்நாட்டிலுள்ள தனியார் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. இதன் அடிப்படையில் இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் உறுப்பினர்கள், மருத்துவ கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். ஆய்வின் முடிவில், தண்டலம் மாதா மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் அன்னை மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவ அறிவியல் ஆய்வு மையம், பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் இரண்டு ஆண்டுகள் செயல்படுவதற்கு மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

இதில், கோவை, கற்பகம் மருத்துவக் கல்லூரிக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டுக்கான மருத்துவக் கல்வி படிப்புகளில் 750 இடங்கள் குறைந்துவிட்டன. தமிழ்நாட்டில் 84 ஆயிரம் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளனர். மொத்தமுள்ள 6,850 இடங்களில் 750 இடங்கள் குறைக்கப்பட்டுவிட்டன. ' நீட் நுழைவுத் தேர்வின் பாதிப்பைவிட, மருத்துவப் படிப்புக்கான இடங்கள் குறைக்கப்பட்டது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது' என்கின்றனர் மருத்துவர்கள்.