Tue10172017

Last updateWed, 18 Oct 2017 12am

Back You are here: Home செய்திகள் செய்திகள் பொது/சிறப்பு செய்திகள் நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி தருவதாக ரஜினி உறுதி:

பொது/சிறப்பு செய்திகள்

நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி தருவதாக ரஜினி உறுதி:

நதிகள் இணைப்புக்காக ரூ.1 கோடியை வழங்கத் தயாராக இருப்பதாக நடிகர் ரஜினி உறுதி அளித்துள்ளார் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.12.jpg - 7.35 kB

நடிகர் ரஜினியை சென்னையில் இன்று பி.அய்யாக்கண்ணு தலைமையிலான 16 பேர் கொண்ட விவசாயிகள் குழுவைச் சந்தித்தனர்.

சில வாரங்களுக்கு முன் அரசியலுக்கு வருவதற்காக ரசிகர்களை அழைத்துப் பேசிய ரஜினி போருக்கு தயாராக இருங்கள் என்று கூறினார்.

இன்று விவசாயிகளை சந்திக்கும்போது அவர்களிடம் நதிகளை இணைக்கும் அவர்களது வேண்டுகோளை பிரதமரிடம் பேசப்போவதாக உறுதியளித்துள்ளார். மேலும் நதிகளின் இணைப்புக்காக ரூ.1 கோடி ரூபாய் வழங்கவும் விவசாயிகளிடம் வாக்குறுதியை அளித்தார்.

ரஜினியை சந்தித்த பிறகு அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதலில் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பாலாறு, மற்றும் காவேரி போன்ற நதிகளை இணைக்கவேண்டும் என்று ரஜினி கூறினார். நதிகளை இணைக்க உடனடியாக எங்களிடம் ரூ.1 கோடி வழங்க உள்ளதாகவும் கூறினார். ஆனால், நதிகள் இணைப்புகள் திட்டத்திற்காக அதை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குங்கள் என நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

நதிகள் இணைப்பு எனும் கருத்துருவாக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ரஜினிகாந்த். அவர் அதை நிறைவேற்றுவார். பிரதமரை ரஜினிகாந்த் இதற்காக மட்டுமே சந்திக்கப் போவதில்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும்போது நிச்சயம் இதைப் பற்றி பேசுவார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களிலும் ஆதரவளிப்பதாக ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார்.''

இவ்வாறு பிடிஐயிடம் அளித்த பேட்டியில் பி. அய்யாக்கண்ணு தெரிவித்தார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமாவான அய்யாக்கண்ணு தமிழக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களை தொடர்ந்து நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது