Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home செய்திகள் செய்திகள் பொது/சிறப்பு செய்திகள் கேரளாவில் மது அருந்த வயது வரம்பு உயர்வு

பொது/சிறப்பு செய்திகள்

கேரளாவில் மது அருந்த வயது வரம்பு உயர்வு

கேரளாவில், மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக உள்ளது. இதை 23 ஆக உயர்த்துவது என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.al.jpg - 8.45 kB

இதற்காக உரிய சட்ட திருத்தம் செய்வதற்கு அவசர சட்டம் பிறப்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்குமாறு கவர்னர் பி.சதாசிவத்துக்கு சிபாரிசு செய்யப்பட்டது. இதன்மூலம், கேரளாவில், 23 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்தான் மது அருந்த முடியும்.