Wed01172018

Last updateWed, 17 Jan 2018 4am

Back You are here: Home செய்திகள் செய்திகள் பொது/சிறப்பு செய்திகள் புதுச்சேரி - பெங்களூரு இடையே பிப். 15 முதல் விமான சேவை

பொது/சிறப்பு செய்திகள்

புதுச்சேரி - பெங்களூரு இடையே பிப். 15 முதல் விமான சேவை

வரும் பிப்ரவரி 15 முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்கப்படவுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.air.jpg - 6.53 kB

air.jpg - 6.53 kBகடந்த 2013 ஜனவரி மாதம் புதுச்சேரி லாஸ்பேட்டை விமானநிலைய வளாகம் திறக்கப்பட்டது. இதன்பின் புதுச்சேரி - பெங்களூரு இடையே ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் பயணிகளிடம் வரவேற்பு இல்லாததால் அந்த சேவை நிறுத்தப்பட்டது. இதனால் புதுச்சேரி மக்கள் விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் சென்னை விமான நிலையம் மூலமாகவே செல்ல வேண்டி இருந்தது. இந்நிலையில் மோடி தலைமையிலான பதவியேற்ற மத்திய அரசு உதான் திட்டத்தை செயல்படுத்தியது. அதன்மூலம் நாடுமுழுவதும் உள்ள சிறு விமான நிலையங்களுக்கு விமான சேவை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மத்திய அரசின் அனுமதியுடன் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் புதுச்சேரி - ஐதராபாத் இடையே ஸ்பைஸ்ஜெட் விமானம் தனது சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகள் அதிக வரவேற்பு அளித்ததால் வரும் பிப்ரவரி 15 முதல் புதுச்சேரி - பெங்களூரு இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கூடுதல் விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பெங்களூரிலிருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு காலை 10.30க்கு வந்தடையும் என்றும் அதைத்தொடர்ந்து காலை 10.50 மணிக்கு புறப்படும் விமானம் காலை 12.10க்கு பெங்களூரூ சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் ஒருநபருக்கு  ரூ. 1600 என நிர்ணயிக்கத் திட்டமிட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.