Fri06232017

Last updateFri, 23 Jun 2017 4am

Back You are here: Home செய்திகள் செய்திகள் இந்தியச் செய்திகள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க 7 அம்சத் திட்டம்

இந்தியச் செய்திகள்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க 7 அம்சத் திட்டம்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 7 அம்சத் திட்டத்தை தீட்டியிருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.javda.jpg - 4.52 kB

குஜராத் மாநிலம், வதோதரா அருகே உள்ள அனந்த் எனுமிடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'மேக்கிங் ஆஃப் டெவலஃப்டு இந்திய ô மேளா' எனும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

வருகிற 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்த வேண்டும் என்று மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்பு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாங்கள் அதுபோல் இல்லாமல், விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்த வேண்டும் என்று விரும்புகிறோம்.

இதுதொடர்பான 7 அம்சத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்.

நீர்ப்பாசன வசதியை மேம்படுத்துதல், விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்குதல், அறுவடை கால நஷ்டத்தை தடுத்தல் ஆகியவை அந்த 7 அம்சத் திட்டங்களில் முக்கிய அம்சங்கள் ஆகும். இதன்படி, நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதற்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கப்பட்டு அதை செயல்படுத்த கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இதன் முக்கிய நோக்கமானது, ஒவ்வொரு நீர் துளிக்கும், கூடுதல் பயிரை அறுவடை செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

வேம்பு கலந்த சிறிய அளவிலான யூரியா மூட்டைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாட்டில் ஒட்டுமொத்தமாக யூரியாவின் பயன்பாடு குறைந்துள்ளது. இதன் வாயிலாக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.7 ஆயிரம் கோடி மிச்சப்படுகிறது.

முன்பு, சந்தைகளில் 50 கிலோ எடையுடைய யூரியா மூட்டைகள் கிடைத்தன. ஆனால், தற்போது 45 கிலோ யூரியா மூட்டைகள் கிடைக்கின்றன.

ஒவ்வொரு மூட்டையிலும் 5 கிலோ குறைக்கப்பட்டதால், 10 சதவீத யூரியா நுகர்வு மிச்சமாகியுள்ளது.

அதுமட்டுமன்றி, விவசாயிகளுக்கு 7 கோடி எண்ணிக்கையில் மண் வள அட்டைகளை வழங்கியுள்ளது என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.