Tue08222017

Last updateTue, 22 Aug 2017 8am

Back You are here: Home செய்திகள் செய்திகள் இந்தியச் செய்திகள் தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பை பாஜக விரும்பவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

இந்தியச் செய்திகள்

தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பை பாஜக விரும்பவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜகவைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பை விரும்பவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.ratha.jpg - 4.4 kB

வேலூரில் ஒரு விழாவில் கலந்துகொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக செல்வாக்கு சரிந்து விட்டது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்லில் அக்கட்சியில் யாரும் சேரவில்லை.

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை தேர்தல் வந்தால், ஆட்சியை திமுகவால் பிடிக்க முடியாது என்பதால், தற்போதுள்ள ஆட்சியை கலைக்க வேண்டும் என திமுக எண்ணியுள்ளது. தற்போது ஆட்சியை கலைக்க வேண்டும் என திமுகவினர் கேட்கிறார்கள். பாஜகவைப் பொறுத்தவரை ஆட்சிக்கலைப்பை விரும்பவில்லை'' என்றார்.