Tue10172017

Last updateWed, 18 Oct 2017 12am

Back You are here: Home செய்திகள் செய்திகள் இந்தியச் செய்திகள் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது பாஜக! ஒன்று கூடுகிறது எதிர்க்கட்சிகள்

இந்தியச் செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது பாஜக! ஒன்று கூடுகிறது எதிர்க்கட்சிகள்

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஜூலை 17-ஆம் தேதி அடுத்தsoniya.jpg - 9.23 kB

குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பா.ஜ.க அமைச்சர்கள் வெங்கைய நாயுடு உள்ளிட்டோர், சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்து, குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இன்று பா.ஜ.க சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து வரும் 22-ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது வேறு பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. இதனிடையே சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களிடம் பிரதமர் மோடி ஆதரவு கேட்டுள்ளார்.