Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home செய்திகள் செய்திகள் இந்தியச் செய்திகள் முத்தலாக் தடைச் சட்ட வரைவு மசோதா: உ. பி. மாநிலம் ஒப்புதல்

இந்தியச் செய்திகள்

முத்தலாக் தடைச் சட்ட வரைவு மசோதா: உ. பி. மாநிலம் ஒப்புதல்

முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து கொடுக்க பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில் மத்தியisa.jpg - 5.32 kB

 அரசால் உருவாக்கப்பட்டுள்ள சட்ட வரைவு மசோதாவுக்கு, நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரப் பிரதேச மாநிலம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசு செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான சித்தார்த் நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள சட்ட வரைவுக்கு, உத்தரப் பிரதேச அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.

இதுகுறித்து வரும் 10ஆம் தேதிக்குள் மாநிலங்கள் தனது பதிலை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது' என்றார்.

உத்தரப் பிரதேச அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நாட்டிலேயே முதல் மாநிலமாக, அந்த சட்ட வரைவுக்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு அடுத்த வாரம் தாக்கல் செய்ய இருக்கிறது.

முத்தலாக் தொடர்பாக நாடு முழுவதும் 177 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு 66 புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதில் அதிகப்பட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் அதிக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன' என்றார்.

செல்லிடப்பேசி, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட வழிகளில், தலாக்-ஏ-பிட்டாத் அல்லது உடனடி முத்தலாக் எனப்படும் முறையின் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து அளிக்கப்படுவதை சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், இந்தத் தீர்ப்புக்கு பிறகும் மேற்கண்ட நடைமுறை கடைபிடிக்கப்படுவது தொடர்வதாக மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. எனவே அதை சட்ட ரீதியில் தடை செய்யும் வகையில் சட்ட வரைவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதில் தலாக்-ஏ-பிட்டாத் அல்லது உடனடி முத்தலாக் நடைமுறை சட்ட விரோதம், அதை கடைபிடிப்போருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் சட்ட வரைவை, அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்து, அதன்மீது உடனடியாக பதில் தெரிவிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.