Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home செய்திகள் செய்திகள் இந்தியச் செய்திகள் கங்கையை சுத்தப்படுத்த 1500 கோடி நன்கொடை!

இந்தியச் செய்திகள்

கங்கையை சுத்தப்படுத்த 1500 கோடி நன்கொடை!

கங்கையை சுத்தப்படுத்த ரூ.1,500 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். கடந்தnithin.jpg - 6.49 kB

நாடாளுமன்ற தேர்தலின்போது கங்கை நதி சுத்தப்படுத்தப்படும் என்று பாஜ தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதையடுத்து, தூய்மை கங்கை திட்டம் தயாரிக்கப்பட்டது..  இது பற்றி மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: கங்கை மறுசீரமைப்பு திட்டத்திற்காக கடந்த வாரம் லண்டனில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதை நான் தொடங்கி வைத்தேன். அதன் மூலம் பல்வேறு நிறுவனங்கள், இங்கிலாந்தை மையமாக கொண்ட தொழில் அமைப்புகள் சார்பில் மத்திய அரசுக்கு இந்த திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி கிடைத்துள்ளது. மேலும், நமது நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் சார்பில் கூடுதலாக ரூ.500 கோடி கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி தொழில் அதிபர்கள் மூலம் பாட்னா, கான்பூர், ஹரித்துவார், கொல்கத்தா பகுதியில் ஓடும் கங்கை சீரமைக்கப்படும்.

மேலும் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு இந்த திட்டத்திற்காக நான் பயணம் செய்ய உள்ளேன். ஒட்டு மொத்தமாக கங்கையை சீரமைக்க மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடிக்கு திட்டம் தயாரித்துள்ளது. இதுவரை 97 திட்டங்கள் இதற்காக தயாரிக்கப்பட்டு அதில் 55 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. 15 திட்டங்கள் தனியார் ஒத்துழைப்புடன் நடைபெறும். மீதம் உள்ள திட்டங்களுக்கு 2018 மார்ச் மாதத்திற்குள் டெண்டர் விடப்படும். இதன் மூலம் 4500 கிராமங்கள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.