Fri12152017

Last updateFri, 15 Dec 2017 9pm

Back You are here: Home செய்திகள் செய்திகள் உலக செய்திகள் ஐஎஸ் தலைவர் பாக்தாதி பலி? ரஷ்யா தகவல்

உலக செய்திகள்

ஐஎஸ் தலைவர் பாக்தாதி பலி? ரஷ்யா தகவல்

சிரியாவில் கடந்த மாதம் நடத்தப் பட்ட வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அபு பக்கர் அல்pata.jpg - 5.74 kB

பாக்தாதி உயிரிழந் திருக்கலாம் என்றும் இதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சிரியாவின் ராக்கா அருகே கடந்த மாதம் 28-ம் தேதி ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அன்றிரவு சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் அவர்கள் குழுமியிருந்த பகுதியில் சுமார் 10 நிமிடம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த தீவிரவாத அமைப்பின் 30 முக்கிய தளபதிகளும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஐஎஸ் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அபு பக்கர் அல் பாக்தாதியும் உயிரிழந்திருப்பதாக கூறப் படுகிறது. பல்வேறு வட்டாரங்கள் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது. எனினும் இதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் பற்றி அமெரிக்காவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது