Tue06272017

Last updateTue, 27 Jun 2017 3pm

Back You are here: Home செய்திகள் செய்திகள் யூடியூப்/காணொளிகள் பிலிப்பைன்ஸில் தனிமையில் வாழும் இலங்கை யானை

யூடியூப்/காணொளிகள்

பிலிப்பைன்ஸில் தனிமையில் வாழும் இலங்கை யானை

இலங்கை காட்டில் பிறந்த மாலி என்ற யானை பிலிப்பைன்ஸ் நாட்டின் மெனிலா நகரத்தின் உயிரியல் பூங்காவில் துன்பத்துடன் வாழும் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.eliph.jpg - 6.63 kB

43 வயதுடைய மாலி தற்போது மெனிலா நகரத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சிறைப்பாட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1977ஆம் ஆண்டு இலங்கையினால் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வழங்கப்பட்ட இந்த யானை இன்று தனியாக தான் வாழ்வதாக கூறப்படுகின்றது.

35 வருடங்களான காடு ஒன்றை காணாத மாலியை சரணாலயம் ஒன்றிற்கு அனுப்பி வைக்குமாறு பிலிப்பைன்ஸ் அகிம்சைவாதியினர் அந்த நாட்டு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நீண்ட நேரம் மாலி கான்க்ரீட் முற்றத்தினுள் நிற்பதனால் அதன் காலின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது

பிலிப்பைன்ஸ் நாட்டில் சரணாலயங்கள் இல்லாமையினால் தாய்லாந்தில் உள்ள சரணாலயம் ஒன்றிற்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மாலியை காப்பாற்றுமாறு விலங்கு அகிம்சைவாதியினருடன் பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் 120000 பேர் மனு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இலங்கை ஆட்சியாளர்களினால் யானைகளை வெளிநாட்டிற்கு அனுப்புவதனை நிறுத்துமாறு இலங்கையர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.