Mon10162017

Last updateTue, 17 Oct 2017 12am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட் 8 ஆயிரம் ரன்களை கடந்து கோலி சாதனை

கிரிக்கெட்

8 ஆயிரம் ரன்களை கடந்து கோலி சாதனை

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 88 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்தார். தனது 175-வது இன்னிங்சில் இந்த இலக்கை கடந்த விராட் கோலி இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 8

ஆயிரம் ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 182 இன்னிங்சில் இந்த இலக்கை தொட்டதே சாதனையாக இருந்தது. அதை கோலி முறியடித்து இருக்கிறார். இந்திய தரப்பில் பார்த்தால் 8 ஆயிரம் ரன்களை கடக்க சவுரவ் கங்குலி 200 இன்னிங்சும், சச்சின் தெண்டுல்கர் 210 இன்னிங்சும் எடுத்துக் கொண்டனர். 

28 வயதான விராட் கோலி இதுவரை 27 சதங்கள் உள்பட 8,008 ரன்கள் சேர்த்துள்ளார்.