Tue08222017

Last updateTue, 22 Aug 2017 8am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட் ரோகித், பும்ரா நீக்கம்!

கிரிக்கெட்

ரோகித், பும்ரா நீக்கம்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.bumrah.jpg - 5.12 kB

வெஸ்ட் இண்டீஸ் செல்லவுள்ள இந்திய அணி, 5 ஒரு நாள், ஒரு ‘டுவென்டி–20’ போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் 23ல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ரோகித் சர்மா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ரிஷாப் பன்ட், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர்.

டெஸ்ட் வாய்ப்பு:

கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய ரோகித், முழங்கால் காயத்திற்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. காயத்தில் இருந்து மீண்டு, சமீபத்தில் முடிந்த 10வது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற இவர், மும்பை அணிக்கு கோப்பை வென்று தந்தார். தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தி வருகிறார். இருப்பினும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. அடுத்து இந்திய அணி, இலங்கையுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் ‘மிடில்–ஆர்டரில்’ இடம் காலியாக இருப்பதால், ரோகித் சர்மாவை களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியது: காயத்தில் இருந்து மீண்ட ரோகித், 10வது ஐ.பி.எல்., தொடரில் பைனல் வரை விளையாடினார். அதனை தொடர்ந்து, சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருவதால், மீண்டும் காயத்தால் பாதிக்கப்படாமல் இருக்க இவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளோம். அதன்பின் நிறைய போட்டிகளில் பங்கேற்க உள்ளோம். எனவே இந்த ஓய்வு, ரோகித் சர்மா புத்துணர்ச்சியுடன் களமிறங்க உதவியாக இருக்கும். நல்ல ‘பார்மில்’ உள்ள இவர், உடற்தகுதியை தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே ஓய்வு வழங்கப்பட்டது. ஒருமனதாக எடுக்கப்பட்ட இம்முடிவை ரோகித் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறேன்.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.

பும்ரா மறுப்பு

இளம் இந்திய வீரர் பும்ரா, உடற்தகுதி காரணமாக நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பும்ரா மறுத்துள்ளார். இவர் கூறுகையில், ‘‘நான் முழு உடற்தகுதியுடன் உள்ளேன். தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகம் விருப்பத்தின்படி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த ஒரு பிரச்னையும் கிடையாது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்யப்படாததால் ஏமாற்றம் இல்லை,’’ என்றார்.