Fri12152017

Last updateFri, 15 Dec 2017 9pm

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட் இந்திய அணி சாதிக்குமா

கிரிக்கெட்

இந்திய அணி சாதிக்குமா

பைனலில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக முறை (3) கோப்பை வென்றdhoni.jpg - 5 kB

அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடிக்கலாம். இதுவரை இந்தியா (2002, 2013), ஆஸ்திரேலியா (2006, 2009) அணிகள் தலா 2 முறை கோப்பை வென்றுள்ளன.

* இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான், இன்னும் 112 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றலாம். இதுவரை இவர், 9 போட்டியில் 3 சதம், 3 அரைசதம் என 680 ரன்கள் எடுத்துள்ளார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (791 ரன், 17 போட்டி) உள்ளார்.

* சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இலங்கையின் ஜெயசூர்யா (189 ரன், 3 போட்டி) முன்னிலை வகிக்கிறார். இவ்வரிசையில் முதலிடத்தை கைப்பற்றும் வாய்ப்பு  இந்தியாவின் விராத் கோஹ்லி (119 ரன்), ஷிகர் தவான் (116) ஆகியோருக்கு ஏற்பட்டுள்ளது.

முதல் முறை

ஐ.சி.சி., நடத்தும் உலக கோப்பை (50 ஓவர்), ‘டுவென்டி–20’ உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற மிகப் பெரிய தொடர்களின் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2வது முறையாக மோதுகின்றன. இதற்கு முன், 2007ல் தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் இவ்விரு அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.

* சாம்பியன்ஸ் டிராபி பைனலில் மோதுவது முதன்முறை.

சூப்பர் ஜோடி

எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் வரிசையில் இந்தியாவின் சச்சின், சித்து ஜோடி முதலிடத்தில் உள்ளது. கடந்த 1996ல் சார்ஜாவில் நடந்த போட்டியில் 2வது விக்கெட்டுக்கு இணைந்த இந்திய ஜோடி 231 ரன்கள் குவித்தது.

இரண்டாவது இடத்தில், பாகிஸ்தானின் சயீத் அன்வர், இசாஜ் அகமது ஜோடி (230 ரன், 3வது விக்கெட், இடம்: தாகா, 1998) உள்ளது.

69

அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 69 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பங்கேற்றுள்ளார். இவரை தொடர்ந்து பாகிஸ்தானின் இன்சமாம், அப்ரிதி தலா 67 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இந்தியாவின் அசார், 64 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

அசார் அபாரம்

இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில் அதிக ‘கேட்ச்’ செய்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் அசார் முதலிடத்தில் உள்ளார். இவர், 64 போட்டியில் 44 ‘கேட்ச்’ செய்துள்ளார். இவரை அடுத்து பாகிஸ்தானின் அப்ரிதி (30 ‘கேட்ச்’), இந்தியாவின் சச்சின் (29), டிராவிட் (25) பீல்டிங்கில் அசத்தினர்.

71

அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் மொயின் கான் முன்னிலை வகிக்கிறார். இவர், 49 போட்டியில் 58 ‘கேட்ச்’, 13 ‘ஸ்டெம்பிங்’ என 71 விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் தோனி (40 விக்கெட் வீழ்ச்சி), பாகிஸ்தானின் கம்ரான் அக்மல் (31), இந்தியாவின் நயன் மோங்கியா (29) உள்ளனர்.

வெற்றிக் கேப்டன்

அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் பட்டியலில் பாகிஸ்தானின் இம்ரான் கான் முன்னிலையில் உள்ளார். இவர், 24 போட்டியில் 19 வெற்றியை பெற்றுத் தந்துள்ளார்.

* தற்போதைய இந்திய கேப்டன் கோஹ்லி, 2 போட்டியில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுத் தந்துள்ளார்.

100 சதவீதம்     

உலக கோப்பை (50 ஓவர் + ‘டுவென்டி–20’) வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 100 சதவீத வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரை மோதிய 11 போட்களில் (50 ஓவரில் 6 + ‘டுவென்டி–20’யில் 5 போட்டி) மோதின. அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தொடருமா

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நான்கு முறை மோதின. இதில் பாகிஸ்தான் 2 (2004, 2009), இந்தியா 2 (2013, 2017) போட்டிகளில் வென்றன. பைனலில் இந்திய அணி அசத்தும் பட்சத்தில், தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்யலாம்.

127

சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 128 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 52, பாகிஸ்தான் 72 போட்டிகளில் வென்றன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை.

356

கடந்த 2005ல் விசாப்பட்டனத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

* கடந்த 2004ல் கராச்சியில் நடந்த ஒருநாள் போட்டியில் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக தனது சிறந்த ஸ்கோரை பெற்றது.

79

சியால்கோட்டில், 1978ல் நடந்த ஒருநாள் போட்டியில் 79 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக தனது குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

* கடந்த 1985ல் சார்ஜாவில் நடந்த ஒருநாள் போட்டியில் 87 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டான’ பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக மோசமான ஸ்கோரை பெற்றது.

சச்சின் முதல்வன்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், இந்திய ஜாம்பவான் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இவர், 69 போட்டியில் 5 சதம், 16 அரைசதம் உட்பட 2526 ரன்கள் எடுத்துள்ளார்.

* தற்போதுள்ள இந்திய வீரர்களில் யுவராஜ் சிங் (1338 ரன்), தோனி (1226) ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்துள்ளனர்.

194

இவ்விரு அணிகள் மோதிய போட்டிகளில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் முன்னிலை வகிக்கிறார். கடந்த 1997ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் அசத்திய அன்வர், 146 பந்தில் 194 ரன்கள் (5 சிக்சர், 22 பவுண்டரி) குவித்தார். இதன்மூலம் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். தற்போது இச்சாதனை இந்தியாவின் ரோகித் சர்மா (264 ரன், எதிர்–இலங்கை, இடம்: கோல்கட்டா, 2014) வசம் உள்ளது.

* இரண்டாவது இடத்தில் இந்திய கேப்டன் விராத் கோஹ்லி (183 ரன், இடம்: தாகா, 2012) உள்ளார்.

5

அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின், பாகிஸ்தானின் சல்மான் பட் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 5 சதம் அடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து பாகிஸ்தானின் சோயப் மாலிக், சயீத் அன்வர், இன்சமாம் தலா 4 சதம் அடித்துள்ளனர்.

தற்போதுள்ள இந்திய வீரர்களில் கேப்டன் விராத் கோஹ்லி, தோனி தலா 2 சதமடித்துள்ளனர்.

‘டக்–அவுட்’ சோகம்

அதிக முறை ‘டக்–அவுட்’ ஆன வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் ஸ்ரீநாத், பாகிஸ்தானின் அப்ரிதி முன்னிலையில் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா 6 முறை ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாகினர். பாகிஸ்தானின் யூனிஸ் கான், மொயின் கான், இந்தியாவின் சச்சின் தலா 5, கங்குலி 4 முறை ‘டக்–அவுட்’ ஆனார்கள்.

அக்ரம் அசத்தல்

அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் முதலிடத்தில் உள்ளார். இவர், 48 போட்டியில் 60 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.