Fri09222017

Last updateFri, 22 Sep 2017 6am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாக்.

கிரிக்கெட்

இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாக்.

இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி., தொடரின் பைனலில் அதிக ரன்கள் வித்தியாசத்தில்cup.jpg - 7.5 kB

சிறந்த வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனை படைத்தது. இதற்கு முன், 2003ல் தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான பைனலில் ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சிறந்த வெற்றியாக இருந்தது.

* தவிர, சாம்பியன்ஸ் டிராபி பைனலில் அதிக ரன்கள் (180 ரன்) வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்த அணியானது பாகிஸ்தான். இதற்கு முன், கடந்த 2013ல் இந்திய அணி (எதிர்–இங்கிலாந்து) 5 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

முதன்முறை

இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் முதன்முறையாக கோப்பை வென்றது. இதுவரை இந்தியா (2002*, 2013), ஆஸ்திரேலியா (2006, 2009) அணிகள் அதிகபட்சமாக தலா 2 முறை கோப்பை வென்றுள்ளன. தென் ஆப்ரிக்கா (1998), நியூசிலாந்து (2000), வெஸ்ட் இண்டீஸ் (2004), இலங்கை (2002*) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

கடந்த 2002ல் மழையால் பைனல் ரத்தாக, இந்தியா–இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

* தவிர, ஐ.சி.சி., தொடரின் பைனலில் முதன்முறையாக பாகிஸ்தான் அணி, இந்தியாவை வீழ்த்தியது. இதற்கு முன், கடந்த 2007ல் நடந்த ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனலில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.

338

பைனலில் 338 ரன்கள் எடுத்த பாகிஸ்தான், ஒருநாள் போட்டி அரங்கில் இந்தியாவுக்கு எதிராக 2வது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2004ல் கராச்சியில் நடந்த போட்டியில் 344 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக உள்ளது.

* தவிர இது, சாம்பியன்ஸ் டிராபியில் பதிவான 2வது அதிகபட்ச ஸ்கோர். கடந்த 2004ல் ஓவல் மைதானத்தில் நடந்த அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 347 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக உள்ளது.

* இது, சாம்பியன்ஸ் டிராபி பைனலில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். கடந்த 2000ம் ஆண்டு நைரோபியில் நடந்த இந்தியாவுக்கு (264/6) எதிரான பைனலில் நியூசிலாந்து அணி 265 ரன்கள் எடுத்தது அதிகபட்சமாக இருந்தது.

இரண்டாவது முறை

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்திய அணி, இரண்டாவது முறையாக தோல்வி அடைந்து கோப்பையை நழுவவிட்டது. இதற்கு முன், 2000ம் ஆண்டு நைரோபியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான பைனலில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

மூன்றாவது முறை

சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக மூன்றாவது தோல்வியை பெற்றது. இதுவரை மோதிய 5 போட்டிகளில் பாகிஸ்தான் 3 (2004, 2009, 2017ல் பைனல்), இந்தியா 2ல் (2013, 2017ல் லீக் போட்டி) வென்றன.

தவான் ‘338’

அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ஷிகர் தவான், முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதம் என 338 ரன்கள் குவித்தார்.

ஹசன் அலி ‘13’

அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் ஹசன் அலி முதலிடம் பிடித்தார். இவர், 5 போட்டியில் 13 விக்கெட் வீழ்த்தினார்.

மூன்றாவது கோப்பை

சாம்பியன்ஸ் டிராபி வென்ற பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி., நடத்தும் மிகப் பெரிய தொடர்களில் மூன்றாவது கோப்பை வென்றது. இதற்கு முன், 1992ல் உலக கோப்பை (50 ஓவர்), 2009ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பையை கைப்பற்றியது.

நான்காவது தோல்வி

ஐ.சி.சி., நடத்தும் மிகப் பெரிய தொடர்களின் பைனலில் இந்திய அணி, 4வது முறையாக தோல்வி அடைந்தது. இதற்கு முன், 2003ல் 50 ஓவர் உலக கோப்பை (எதிர்–ஆஸி.,), 2014ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை (எதிர்–இலங்கை), 2000ல் சாம்பியன்ஸ் டிராபி (எதிர்–நியூசிலாந்து) பைனலில் தோல்வி அடைந்தது.

128

பாகிஸ்தானின் அசார் அலி, பகர் ஜமான் ஜோடி 128 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஐ.சி.சி., தொடர்களில், இந்தியாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த பாகிஸ்தான் ஜோடி என்ற சாதனை படைத்தது. இதற்கு முன், 1996ல் பெங்களூருவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை காலிறுதியில், பாகிஸ்தானின் ஆமர் சோகைல், சயீத் அன்வர் ஜோடி, 84 ரன்கள் சேர்த்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

* தவிர அசார் அலி, பகர் ஜமான் ஜோடி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், இந்தியாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த பாகிஸ்தான் ஜோடி வரிசையில் 6வது இடம் பிடித்தது. முதலிடத்தில் முகமது ஹபீஸ், நாசிர் ஜாம்ஷெத் (224 ரன், 2012, தாகா) உள்ளது.

114

அபாரமாக ஆடிய பாகிஸ்தானின் பகர் ஜமான் (114) சதமடித்தார். இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் சதமடித்த 6வது வீரரானார். இதற்கு முன், வெஸ்ட் இண்டீசின் வாலேஸ் (103, எதிர்– தென் ஆப்ரிக்கா, 1998), இந்தியாவின் கங்குலி (117, எதிர்–நியூசிலாந்து, 2000), நியூசிலாந்தின் கெய்ன்ஸ் (102*, எதிர்–இந்தியா, 2000), இங்கிலாந்தின் டிரஸ்கோதிக் (104, எதிர்–வெஸ்ட் இண்டீஸ், 2004), ஆஸ்திரேலியாவின் வாட்சன் (105*, எதிர்–நியூசிலாந்து, 2009) ஆகியோர் பைனலில் சதமடித்தனர்.

* தவிர, சாம்பியன்ஸ் டிராபியில் சதமடித்த 3வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமை பெற்றார் பகர் ஜமான். இதற்கு முன், சயீத் அன்வர் (105*, எதிர்–இலங்கை, 2000 மற்றும் 104, எதிர்–நியூசிலாந்து, 2000), சோயப் மாலிக் (128, எதிர்–இந்தியா, 2009) சதமடித்தனர்.

* தவிர இது, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் பதிவான 50வது சதம்.

ரூ. 14 கோடி பரிசு

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு, கோப்பையுடன் ரூ. 14 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது. தோல்வி அடைந்த இந்தியாவுக்கு ரூ. 7 கோடி பரிசு அளிக்கப்பட்டது.

சச்சின் வருகை

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி பைனலை காண, முன்னாள் இந்திய ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், தனது மனைவி அஞ்சலியுடன் வந்திருந்தார். பிரத்யேக கேலரியில் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார்.