Sat03172018

Last updateSat, 17 Mar 2018 4am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட் அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

கிரிக்கெட்

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் ‘டாஸ்’ வென்று ‘பேட்’ செய்வது தான் பாதுகாப்பானது. இதனை  2003ல் ஜோகனஸ்பர்க்கில்kohli.jpg - 5.97 kB

நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி உணரவில்லை.‘ டாஸ்’ வென்ற இவர், தவறாக ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இதனை பயன்படுத்திய பாண்டிங் சதம் அடிக்க, ஆஸ்திரேலியா 50 ஓவரில் 359/2 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 39.2 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, கோப்பையை கோட்டைவிட்டது. இதே போல நேற்று ‘டாஸ்’ வென்ற கோஹ்லியும் தவறாக பவுலிங் தேர்வு செய்தார். இம்முறை ஜமான் சதம் அடிக்க, இந்தியாவின் கோப்பை கனவு தகர்ந்தது.

‘நோ–பால்’ பும்ரா

இந்திய அணிக்கு நேற்று ‘வில்லனாக’ மாறினார் பும்ரா. இவர், போட்டியின் 4வது ஓவரில் வீசிய பந்தை பகர் ஜமான் அடிக்க, அதை தோனி பிடிக்க, அவுட்டானார். ஆனால், ‘ரீப்ளே’யில்‘ நோ–பால்’ என தெரிய வர இந்திய ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கின. ஜமான் மீண்டும் களத்திற்கு திரும்பினார். அப்போது 4 ரன் எடுத்திருந்த இவர், கடைசியில் சதம் அடித்து இந்திய அணிக்கு தொல்லை தந்தார். கடைசி கட்டத்திலும் ‘நோ–பால்’ வீசி கடுப்பேற்றினார் பும்ரா.

சொதப்பல் கேப்டன்சி

கேப்டனாக கோஹ்லியின் வியூகங்கள் ஏமாற்றம் அளித்தன. அஷ்வின், ஜடேஜாவை பாகிஸ்தான் பவுலர்கள் பதம் பார்த்த நிலையில், ஜாதவை முன்னதாக அழைக்க தவறினார். மிகவும் தாமதமாக 39வது ஓவரில் தான் ஜாதவிற்கு வாய்ப்பு தந்தார். அவரும் பாபரை அவுட்டாக்கி நம்பிக்கை தந்தார்.  ‘விரட்டு மன்னன்’ என்று பெயர் பெற்ற கோஹ்லி  இமாலய இலக்கை சேஸ் செய்ய வேண்டிய நிலையில் ஏமாற்றினார். ஒரு முறை கண்டம் தப்பிய இவர், அதை பயன்படுத்த தவறினார். அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே நேரத்தில் 4 ரன்னில் தப்பிய பாகிஸ்தானின் ஜமான், சதம் அடித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.

ஐ.பி.எல்., காரணமா

இந்திய வீரர்கள் பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடிய கையுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றனர். தொடர்ந்து விளையாடியதால் சோர்வடைந்த இவர்கள், இரண்டாவது இடமே பெற முடிந்தது. ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்காத பாகிஸ்தான் வீரர்கள் கோப்பையை வசப்படுத்தினர்.

இது சரியா ஜடேஜா

27வது ஓவரை ஹசன் அலி வீசினார். இதன் 3வது பந்தை அருகில் தட்டி விட்டு, ஒரு ரன்னுக்காக ஓடினார். பின், திடீரென நின்றார். அதற்குள், பாண்ட்யா ஓடி வர, இரு பேட்ஸ்மேன்களும் ஒரே முனையில் நின்றனர்.

பந்தை பெற்ற ஹசன், ‘பெயில்சை’ தகர்க்க, பாண்ட்யா (76) பரிதாபமாக ரன்–அவுட்டானார். பவுண்டரி, சிக்சராக விளாசிய பாண்ட்யாவுக்கு வாய்ப்பு அளி்த்து, ஜடேஜா  ‘பெவிலியன்’ திரும்பி இருக்கலாம். அப்படி செய்திருந்தால், இந்தியாவின் தோல்வி வித்தியாசமும் சற்று குறைந்திருக்கும்.

பாடம் கற்றோம்

இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘ கோப்பை வென்ற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள். எந்த அணியையும் வீழ்த்த முடியும் என நிரூபித்துகாட்டியுள்ளனர். கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். இத்தொடரில் எங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இதனால், பைனலில் வீழ்ந்தாலும், முகத்தில் சிரிப்புடன் உள்ளேன். இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்,’’