Wed01172018

Last updateWed, 17 Jan 2018 4am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட் துணைக்கேப்டன் ரெய்னா

கிரிக்கெட்

துணைக்கேப்டன் ரெய்னா

ஐ.பி.எல்., தொடரின் 11வது சீசன், வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கி, இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களமிறங்குகின்றன. இதையடுத்து, சென்னை அணி தோனி, ரெய்னா,

ஜடேஜா என, மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. 

கேப்டனாக தோனி களமிறங்குகிறார். இதனிடையே, கடந்த இரு சீசன்களில் குஜராத் அணி கேப்டனாக செயல்பட்ட ரெய்னா, சென்னை அணிக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுகுறித்து ரெய்னா கூறுகையில்,‘‘ தோனி கேப்டன், நான் துணைக் கேப்டனாக செயல்பட உள்ளேன். அணியில் ஜடேஜாவும் உள்ளார். ஏலத்தில் சில வீரர்களை எடுக்க உள்ளோம். விரைவில் அனைவரும் சந்தித்து, எப்படி செயல்படுவது என, திட்டமிட உள்ளோம்,’’ என்றார்.