Tue10172017

Last updateWed, 18 Oct 2017 12am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது மற்றயவை இந்தோனேஷிய பாட்மின்டன்: பைனலில் ஸ்ரீகாந்த்

இந்தோனேஷிய பாட்மின்டன்: பைனலில் ஸ்ரீகாந்த்

இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேறினார். அரையிறுதியில் உலகின் ‘நம்பர்–1’ வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை தோற்கடித்தார்.Srikanth.jpg - 4.39 kB

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், இந்தோனேஷிய சூப்பர்சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலகின் ‘நம்பர்–1’ தென் கொரியாவின் சன் வான் ஹோ, 22வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஸ்ரீகாந்த் மோதினர். முதல் செட்டை 21–15 எனக் கைப்பற்றிய ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டை 14–21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அசத்திய ஸ்ரீகாந்த் 24–22 என போராடி வென்றார். ஒரு மணி நேரம், 12 நிமிடம் வரை நீடித்த போட்டியில் ஸ்ரீகாந்த் 21–15, 14–21, 24–22 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

 

பிரனாய் அதிர்ச்சி: மற்றொரு அரையிறதியில் உலகின் ‘நம்பர்–25’ இந்தியாவின் பிரனாய், 47வது இடத்தில் உள்ள ஜப்பானின் சகாய் கசூமசா மோதினர்.

முதல் செட்டை 21–17 எனக் கைப்பற்றிய பிரனாய், இரண்டாவது செட்டை 26–28 என போராடி இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய பிரனாய், 18–21 என இழந்தார்.

ஒரு மணி நேரம், 17 நிமிடம் வரை நீடித்த போட்டியில் பிரனாய் 21–17, 26–28, 18–21 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.