Fri12152017

Last updateFri, 15 Dec 2017 9pm

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது மற்றயவை ஹாக்கி: இந்தியா–பாக்., இன்று மோதல்

ஹாக்கி: இந்தியா–பாக்., இன்று மோதல்

லண்டனில், ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்று நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, மலேசியா, இந்தியா, தென் கொரியாhockey.jpg - 8.85 kB

என 10 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. இந்திய அணி, ‘பி’ பிரிவில் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பாகிஸ்தான், கனடா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

பாக்., அணியுடன் மோதல்

‘பி’ பிரிவில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சர்வதேச அரங்கில் இவ்விரு அணிகள் 167 முறை மோதின. இதில் இந்தியா 55, பாகிஸ்தான் 82 போட்டிகளில் வென்றன. 30 போட்டிகள் ‘டிரா’ ஆனது.

* பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 324 கோல் அடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி 388 கோல் பதிவு செய்துள்ளது.

* முதன்முதலில், 1956ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த ஒலிம்பிக் பைனலில் இவ்விரு அணிகள் மோதின. இதில் இந்தியா 1–0 என வெற்றி பெற்று தங்கம் வென்றது.

* கடைசியாக கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் மோதின. இதில் இந்தியா 3–2 என வென்றது.

* கடந்த 1982ல் டில்லியில் நடந்த ஆசிய விளையாட்டு பைனலில் பாகிஸ்தான் அணி 7–1 என இந்தியாவை வீழ்த்தியது, சிறந்த வெற்றியாக உள்ளது.

இந்தியா வெற்றி:

முன்னதாக நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி, கனடாவை எதிர்கொண்டது.  5வது நிமிடத்தில் இந்தியாவின் எஸ்.வி. சுனில் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு 10வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங், ஒரு ‘பீல்டு’ கோல் அடித்தார். ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ராமன்தீப் சிங் ‘பாஸ்’ செய்த பந்தை இந்தியாவின் சர்தார் சிங், கோலாக மாற்றினார். . முதல் 30 நிமிட முடிவில், இந்திய அணி 3–0 என முன்னிலையில் இருந்தது. ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3–0 என, தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.