Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது மற்றயவை செஸ்: ஆனந்த் தோல்வி

செஸ்: ஆனந்த் தோல்வி

கிளாசிக் செஸ் தொடரின் ஐந்தாவது சுற்று போட்டியில் ஆனந்த், தோல்வியடைந்தார்.Vishwa.jpg - 8.15 kB

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், கிளாசிக் செஸ் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் ஆனந்த், உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே) உள்ளிட்ட 10 முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இதில் முதல் நான்கு சுற்று போட்டிகளை ‘டிரா’ செய்த ஆனந்த், ஐந்தாவது சுற்றில், இத்தாலியின் பேபியோ காருணா சந்தித்தார். இம்முறை ஆனந்த், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். ஆனந்த் அடுத்தடுத்து தவறுகள் செய்ய, போட்டியின் 39 வது நகர்த்தலில், வேறு வழியின்றி தோல்வியை ஏற்றுக் கொண்டார்.

மற்ற வீரர்கள் மோதிய ஐந்தாவது சுற்று போட்டிகள் ‘டிரா’ ஆகின. ஐந்து சுற்று முடிவில், பேபியோ காருணா (3.5 புள்ளி), முதலிடத்தில் உள்ளார். தலா 2 புள்ளிகள் பெற்ற ஆனந்த், கர்ஜாகின் (ரஷ்யா) 9வது இடத்தில் உள்ளனர்.  கார்ல்சன், மைக்கேல் ஆடம்ஸ் உள்ளிட்ட 7 பேர், தலா 2.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்