Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது மற்றயவை சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் சென்னை அணி, ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டாவை 3–2 என, வென்றது.Jeje.jpg - 7.15 kB

இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் நான்காவது சீசன் தற்போது நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை அணி, ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டாவை சந்தித்தது. இதன் முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் சென்னை வீரர் செரினோ அடித்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டு வர, அங்கிருந்த ஜீஜே (65வது), கோலாக மாற்றினார். 77வது நிமிடம் கோல்கட்டாவின் ஜெகுன்கா கோல் அடித்தார். அடுத்த 7வது நிமிடத்தில் கால்ட்ரன் ஒரு கோல் அடிக்க, சென்னை அணி 2–1 என, முந்தியது.

இந்நிலையில் நிஜாஜி, 89 வது நிமிடம் ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 2–2 என, சமன் ஆனது. போட்டியின் கடைசி நிமிடத்தில் எழுச்சி பெற்ற ஜீஜே, இரண்டாவது கோல் அடித்தார். முடிவில் சென்னை அணி, 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் தோற்ற சென்னை அணி, அடுத்து வடகிழக்கு யுனைடெட், புனே தற்போது கோல்கட்டா அணியை சாய்த்து, ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.