Wed01172018

Last updateWed, 17 Jan 2018 4am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது மற்றயவை ஆஸி., ஓபன்: எளிய பிரிவில் பெடரர்

ஆஸி., ஓபன்: எளிய பிரிவில் பெடரர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் பெடரர், ஸ்பெயினின் நடாலுக்கு எளிதானதாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் வரும் 15ல்

மெல்போர்னில் துவங்குகிறது. வீரர், வீராங்கனைகள் யார் யாருடன் மோதுவது என்பதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ சுவிட்சர்லாந்தின் பெடரர் 20வது கிராண்ட்ஸ்லாம் கோப்பை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார். தனது முதல் சுற்றில் தரவரிசையில் 51வது இடத்திலுள்ள சுலோவேனியாவின் அல்ஜாசை எதிர் கொள்கிறார். இரண்டாவது சுற்றை பொறுத்தவரை தென் கொரியாவின் கிவோன் அல்லது ஜெர்மனியின் லினார்டுடன் மோதலாம். காலிறுதியில் பெடரர், பெல்ஜியத்தின் டேவிட் காபினை எதிர் கொள்ள வேண்டும். 

நடாலுக்கு எளிது: ‘நம்பர்–1’ வீரரான ஸ்பெயினின் நடாலை பொறுத்தவரை முதல் சுற்றில் டொமினிகாவின் விக்டரை (83வது இடம்) சந்திக்கிறார். காலிறுதிக்கு முன்னேறினால் நடாலுக்கு, குரோஷிய வீரர் மரின் சிலிச் சிக்கல் தர வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய ஓபனில் அதிக முறை (6) பட்டம் வென்றுள்ள செர்பியாவின் ஜோகோவிச்சிற்கும் எளிதான முதல் சுற்றே அமைந்துள்ளது. இவர் அமெரிக்காவின் டொனால்டு யங்கை எதிர் கொள்கிறார். அரையிறுதிக்கு முன், பெடரர்– நடால், ஜோகோவிச்– நடால், பெடரர்– ஜோகோவிச் என எந்த மோதலும் நடக்க வாய்ப்பில்லை. 

சிமோனாவுக்கு எப்படி: பெண்கள் பிரிவில் ‘நடப்பு சாம்பியன்’ அமெரிக்காவின் செரினா காயம் காரணமாக பங்கேற்க மாட்டார். கடந்த முறை, பைனல் வரை முன்னேறிய இவரின் சகோதரி வீனஸ் முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் பிலிண்டாவுடன் மோதுகிறார். ‘நம்பர்–1’ வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா, ஆஸ்திரேலியாவின் டெஸ்டானியை (153வது இடம்) சந்திக்கிறார். கடந்த 2008ல் இதில் கோப்பை வென்ற ரஷ்யாவின் ஷரபோவா, ஜெர்மனியின் டாட்ஜனாவுடன் (47வது இடம்) விளையாட உள்ளார். இரண்டு சுற்றில் ஷரபோவா வெற்றி பெற்றால், ஜெர்மனியின் கெர்பருடன் மூன்றாவது சுற்றில் பலப்பரீட்சை நடத்த வேண்டும்.