Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home தொழில்நுட்பம் தொழில்நுட்ப செய்திகள் அறிவியல் கூகுளைப் பயன்படுத்துவதால் மறதி நோய் அபாயம்!: ஆய்வாளர் எச்சரிக்கை

அறிவியல்

கூகுளைப் பயன்படுத்துவதால் மறதி நோய் அபாயம்!: ஆய்வாளர் எச்சரிக்கை

கூகுள் போன்ற தேடல் வலைதளங்களைப் பயன்படுத்தி விவரங்களைப் பெறும் வழக்கத்தால் மறதி நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.google.jpg - 9.01 kB

இதுகுறித்து அந்த நாட்டின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபிராங்க் கன்மூரே கூறியதாவது:

மூளை ஆரோக்கியத்தைப் பரமாரிப்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மூளைக்கு வேலை கொடுத்தால்தான் அது ஆரோக்கியத்துடன் திகழும்.

ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் நாம் நமது மூளையின் வேலைகளை இணையதளத்தைக் கொண்டே செய்துவிடுகிறோம்.

நமக்கு மறந்துபோன ஏதாவது ஒரு தகவலை மீண்டும் பெற வேண்டும் என்றால், அதை மீண்டும் நினைவாற்றலிருந்து தேடிப் பார்ப்பதற்குப் பதிலாக இணையதளத்தில் தேடி எளிதில் பெற்று விடுகிறோம்.

அந்த வகையில், மனிதர்கள் தற்போது தங்களது மூளைகளை மிகப் பெரிய பரிசோதனைக்கு உள்படுத்தி வருகின்றனர். இந்தப் பரிசோதனையின் முடிவில், இணையதளத் தேடல்கள் காரணமாக மறதி நோய் உண்டாகும் அபாயம் அதிகரித்திருப்பது தெரிய வரலாம் என்றார் அவர்.