Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home தொழில்நுட்பம் தொழில்நுட்ப செய்திகள் அறிவியல் பூமியைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு:ஏலியன்கள் இருக்க வாய்ப்பு

அறிவியல்

பூமியைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு:ஏலியன்கள் இருக்க வாய்ப்பு

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமியைப் போன்ற புதிய கிரகத்தில் ஏலியன்கள் இருக்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்sec.jpg - 4.67 kB

. பூமியில் இருந்து 111 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள K2-18b என்ற சூரிய மண்டலத்தில் பூமியைப் போன்ற மற்றொரு கிரகம் உள்ளதாக கனடாவில் உள்ள ரொறன்ரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அது மட்டுமின்றி K2-18b கிரகத்திற்கு அண்டை கோலாக K2-18c என்ற கிரகமும் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. K2-18b கிரகம் பாறைகளால் ஆனதாக இருப்பதால் இதன் மேற்பரப்பில் உயிர் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் இருக்கக் கூடும் என்றும், ஏலியன்கள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகம் மிகவும் துல்லியமான தொலைநோக்கியின் உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.