Wed01172018

Last updateWed, 17 Jan 2018 4am

Back You are here: Home தொழில்நுட்பம் தொழில்நுட்ப செய்திகள் அறிவியல் தனது உயரம் அதிகரித்துவிட்டதாக தவறாக கூறிவிட்டேன்: விண்வெளி வீரர்

அறிவியல்

தனது உயரம் அதிகரித்துவிட்டதாக தவறாக கூறிவிட்டேன்: விண்வெளி வீரர்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தனது உயரம் 9 செ.மீட்டர் அதிகரித்துவிட்டதாக கூறியதற்கு ஜப்பான் விண்வெளி வீரர்space.jpg - 10.87 kB

நோரிஷிகே கானை (Norishige Kanai) மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட அவர், அங்கு 6 மாதங்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

இதனிடையே தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், கடந்த 3 வாரங்களில் தனது உயரம் 9 செ.மீட்டர் அதிகரித்து விட்டதாகவும் இதனால் பூமிக்கு திரும்பி வர தனக்கு வழங்கப்படும் சோயுஸ் கேப்சூல் போதுமானதாக இருக்குமா என்றும் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோவை பலர் அதிர்ச்சியுடன் பகிர்ந்த நிலையில், தவறான தகவலை வெளியிட்டு விட்டதாக அவர் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் உயரத்தை தவறாக அளந்துவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.