Wed01172018

Last updateWed, 17 Jan 2018 4am

Back You are here: Home தொழில்நுட்பம் தொழில்நுட்ப செய்திகள் அறிவியல் ஆமைகளின் பாலினத்தை நிர்ணயிக்கும் கடற்கரை மணல்

அறிவியல்

ஆமைகளின் பாலினத்தை நிர்ணயிக்கும் கடற்கரை மணல்

ஆஸ்திரேலியாவில் பெண்  கடல் ஆமைகள் அதிகரிப்பதற்கு வெப்பநிலை மாற்றமே முக்கிய காரணியாக உள்ளது ஆய்வில்fg.jpg - 5.1 kB

தெரியவந்துள்ளது.  கடல் ஆமைகள்  கடற்கரை பகுதியில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள ரெய்னி தீவு மற்றும் கிரேட் பேரீர் ரீப்பில் உள்ள மவுல்ட்டர் கே கடற்கரையோரங்களில் கடல் ஆமைகள் முட்டையிடுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் குஞ்சு பொரித்து வெளிவரும் அனைத்துமே பெண் ஆமைகளாக மட்டுமே உள்ளன. ஆண் ஆமைகள் கிடையாது. இது ஆமைகளின் இனப்பெருக்கம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடல் ஆமைகள் இனப்பெருக்கம் குறித்து உயிரியில் ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. 

இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: மனிதர்களை போல ஆமைகளில் ஆண், பெண்  பாலினத்தை குரோமோசோம்கள்  நிர்ணயிப்பது கிடையாது. மாறாக ஆமைகள் குஞ்சு பொரிக்கும் காலத்தில் நிலவும் வெப்பநிலையே முட்டைக்குள் ஆண், பெண் கரு உருவாவதை நிர்ணயிக்கின்றது. ஆஸ்திரேலிய கடற்கரையோரங்களில் கதகதப்பான வெப்பநிலையே காணப்படுகின்றது. இதுவே அனைத்து முட்டைகளும் பெண் ஆமைகளாக உருவாவதற்கு பிரதான காரணமாகும். உலகிலேயே ஆமைகள் அதிக இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் கிரேட் பரீர் ரீப் கடற்கரையும் ஒன்றாகும். 2 லட்சம் பெண் ஆமைகள் இங்கே முட்டையிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாற்றம் மற்றும் சூடான சீதோஷணம் காணப்படும் பகுதிகளில் 99.8 சதவீதம் பெண் ஆமைகளே பிறந்துள்ளன. குளிரான பகுதிகளில் 65 சதவீத பெண் ஆமைகளே பிறந்துள்ளன. வெப்பமான மணல் பெண் ஆமைகளையும், குளிர்ச்சியான மணல் ஆண் ஆமைகளையும் உருவாக்குகின்றன. பெண் ஆமைகளுக்கு தேவையான ஆண் ஆமைகள் இல்லாத நிலை ஏற்படக்கூடும். இதனால் இனப்பெருக்கமின்றி ஆமைகள் இனம் அழியும் நிலைக்கு  தள்ளப்படும். ஆமைகளில் ரத்த பிளாஸ்மாவை ஆய்வுக்குட்படுத்தினால் ஆண், பெண் ஆமைகளை வேறுபடுத்தும் ஹார்மோன்களை கண்டறியலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.